கோவை திருவள்ளுவர் நகரில் உள்ள மலையில் ஒற்றை யானை நடமாட்டம்
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருவதால் ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருவதால், யானையை ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருகிறது. மலையின் கீழ் பகுதியில் யானை நடமாடி வருகிறது. இதனால் யானை எப்பொழுது வேண்டுமானாலும் ஊர்க்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் யானையை ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கரோனா!
மேலும், வனத்துறையினர் இரவு நேரங்களிலும் கண்காணிப்புப் பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் நீண்ட நாள்கள் கழித்து மலையில் யானை நடமாடுவதால் பொதுமக்கள் யானையை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...