‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை (இன்று) ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை (இன்று) ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இதன்படி தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள், சூழ்நிலையியல் பாடக்கருத்துகளுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.

திருவள்ளூா் மாவட்டம் புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடா்ந்து எண்ணும் எழுத்தும் திட்டத்தை அவா் தொடக்கி வைத்தார்.

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்கி வைத்த பின் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

கற்பதில் புதிய யுக்தி தேவை என்பதால் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மாணவா்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவா்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் இலக்காகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு 2022-2023- ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனி குழக்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டத்தை செழுமைப்படுத்துவார்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com