
இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு மாவட்டங்களில் உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்போது 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடமும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும் 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் என மொத்தம் 13,331 காலிப் பணியிடங்களை ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான 10 மாதங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஜூலை 2022 தொடங்கி பிப்ரவரி 2023 வரையிலான எட்டு மாதங்களுக்கு அந்தந்த பள்ளி அருகில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமித்துக்கொள்ள பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு கல்வித்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அவ்வாறு நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 என மதிப்பூதியம் வழங்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இடைக்கால ஆசிரியர் நியமனத்துக்கான உத்தரவில், டெட் தேர்ச்சி கட்டாயம் என்று கூறப்படவில்லை. மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரு பணியிடத்தை நாடும்போது, டெட் தேர்ச்சி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், "இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலருக்கு முன்னுரிமை தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்!
இந்நிலையில், கடந்த 2013 , 2014, 2017, 2019- ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணிக்கான ஆசிரியா் தகுதித்தோ்வில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தோ்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்து கிடக்கின்றனா்.
இதற்கிடையே ஆசிரியா் தோ்வில் தகுதி பெற்றவா்கள் பணிக்காக, மீண்டும் ஒரு போட்டித் தோ்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையா் 13,331 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் எட்டு மாதத்திற்கு நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவா்களை பணியில் நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனா். அரசின் இந்த நடவடிக்கை எங்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் இருக்கும்பொழுது, தோ்வில் தகுதி பெறாத அவா்களை நியமனம் செய்வது ஏன் என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு மாவட்டங்களில் உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...