அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செப். 15ல் தொடக்கம்!

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :7 செப்டம்பர் 2022, 7:43 am

DIN

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். இந்தத் திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து, அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பள்ளிகளில் காலை உணவு வழங்கும் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் பிறந்தநாளன்று (செப்டம்பர் 15 ஆம் தேதி) மதுரையில் தொடங்கிவைக்கிறார். மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 4,388 மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது. 

சென்னை உள்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. அதுபோல தமிழகத்தில் 23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.