நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

வெள்ள நிவாரணத்தை ரூ.12,000-ஆக உயர்த்த வலியுறுத்தல்!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :10 டிசம்பர் 2023, 0:05 pm IST

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, வெள்ள நீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் மக்கள் ஒரு வாரமாக வேலைக்குச் செல்ல இயலவில்லை.

திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறைபாட்டால் அனைத்து உடமைகளையும் பொதுமக்கள் இழந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு முமாம்களை நடத்தி அரசு செலவில் பழுது நீக்கி தர வேண்டும். மணலி, எர்ணாவூர், பகுதிகளில் எண்ணெய் கழிவால் பாதித்த மக்களுக்கு கூடுதலாக ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மழை பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.