சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:39 pm

DIN

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடனான சந்திப்பிற்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், மருத்துவத் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.801 கோடியை மத்திய அமைச்சர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம். உக்ரைனில் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு கரோனா தடுப்பூசி கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கக் கோரினோம். தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரி நிறுவக் கோரிக்கை வைத்தோம். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவும் மத்திய அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தோம். 

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கி நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கவும் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினோம். கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வழங்கக் கோரினோம். மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகள் மீது தமிழ்நாடு அரசின் ஆட்சேபணையை தெரிவித்தோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.