மேட்டூர் அணை நீர்வரத்து 120 கன அடி!
மேட்டூர் அணை நீர்வரத்து சனிக்கிழமை120 கன அடியாக சரிந்துள்ளது.


மேட்டூர் அணை நீர்வரத்து சனிக்கிழமை120 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 145 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை 120 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க | புவி வெப்பமயமாதலால் குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.45 அடியில் இருந்து 89.51 அடியாக சரிந்துள்ளது. நாளொன்றுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி சரிந்து வருகிறது.
அணையின் நீர் இருப்பு 52.09 டி.எம்.சி ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...