விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிக வாடிக்கையாளர்கள்: இந்தியாவில் ஜியோ முதலிடம்; தமிழகத்தில்?

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட செல்போன் நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2023, 2:18 pm

DIN

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட செல்போன் நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் குறித்து மக்களவை உறுப்பினரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில், இந்தியாவில் அதிக செல்போன் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம் ஜியோ(43,63,09,270) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக ஏர்டெல் 37,23,15,782 வாடிக்கையாளர்கள், வோடபோன் - ஐடியா 23,09,41,435 வாடிக்கையாளர்களை, பி.எஸ்.என்.எல். 10,14,91,015 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் ஏர்டெல் நிறுவனம்தான் அதிக வாடிக்கையாளர்களை(2,74,98,627) கொண்டுள்ளது. முறையே ஜியோ, வோடபோன் - ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.