கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அமித் ஷா நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!

அமித் ஷா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜூலை 2023, 7:08 am

DIN

அமித் ஷா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை தமிழகம் வருகிறார். அப்போது ராமேசுவரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தைத் அமைச்சா் அமித் ஷா கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார். 

தொடர்ந்து நாளையும் தமிழ்நாட்டில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். 

இதையடுத்து அமித் ஷா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் அமித் ஷா தமிழகம் வந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.