இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரை சந்தித்து எம்.பி கனிமொழி வாழ்த்து!

கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை சந்தித்து அவருக்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து எம்.பி கனிமொழி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.  

News image
Updated On :23 ஜூன் 2023, 5:31 am

DIN

கோவை: கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை சந்தித்து அவருக்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து எம்.பி கனிமொழி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.  

திமுக துணை பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி வெள்ளிக்கிழமை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்வாக கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்து கட்டியணைத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை கனிமொழி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த அவர் ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.  

Story image

ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பயணம் மேற்கொண்ட கனிமொழி.

இந்நிகழ்வைத் நொடர்ந்து,  செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பொதுவாகவே ஆண்களும் பெண்களும் சமம் என்று கூறும் பொழுது பலரும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பேருந்து ஓட்டுவார்களா?, லாரி ஓட்டுவார்களா? என்று அர்த்தமற்ற கேள்விகளை எல்லாம் கேட்பார்கள், இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு பெண் தங்களால் பேருந்தும் ஓட்ட முடியும் என்று காட்டியது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது. 

Story image

ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட எம்.பி கனிமொழி.

முன்னதாகவே ஷர்மிளாவிடம் செல்போனில் பேசியபோது அவர் கோவைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார், நானும் கோவை வந்தால் பேருந்தில் பயணிப்பேன் என்று கூறியிருந்தேன். அதன்படி இன்று அவருடன் பயணித்திருக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். 

மேலும் எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒரு தளத்தில் இணைந்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அது நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் நான் காத்திருக்கிறேன் என தெரிவித்தார். 

Story image

கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்து கட்டியணைத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த கனிமொழி.

பின்னர் இது குறித்து பேசிய பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, பேருந்து ஓட்டும் பொழுது அவருடன் அதிகமாக பேச முடியாததால் பீளமேட்டில் இறங்கி தன்னுடன் பேசினார். என்ன உதவி வேண்டுமானாலும் தான் செய்து தருவதாகவும் கூறினார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே கோவை வரும்போது என்னை சந்திப்பதாக தெரிவித்திருந்தார். அது தற்போது நிகழ்ந்துள்ளது. பேருந்து பயணத்தின் போது அவரால் என்னுடன் பேச முடியவில்லை. எனவே பேருந்து நிலையம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி இருவரும் பேசினோம் என ஷர்மிளா தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.