மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்: மு.க. ஸ்டாலின் ஆலோசனை

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' குறித்து உயர்நிலைக் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை  மேற்கொண்டார். 

News image
Updated On :7 அக்டோபர் 2023, 7:33 am

DIN

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' குறித்து உயர்நிலைக் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை  மேற்கொண்டார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும் மாவட்ட வாரியாக மக்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறார். 

இந்நிலையில் இத்திட்டத்தின் முக்கிய உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.