திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய முன்னாள் இணை அமைச்சரும் அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினரான எஸ்.ஜெகத்ரட்சகன் நடத்தும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை முதல் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், தொடா்புடைய நிறுவனங்கள், அவரது உறவினா்கள், நண்பா்களின் வீடுகள் என சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதையும் படிக்க | திமுக எம்.பி. ஆ. ராசாவின் சொத்துகள் முடக்கம்!
தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரூ. 1,050 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இதுதொடர்பாக வருகிற அக். 14 ஆம் தேதி ஜெகத்ரட்சகன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏப். 1 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்?

புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!

ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்: ஈரான்
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

