திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் வேன் மீது மோதியில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருவாரூர் மாவட்டம், மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மகன் விக்னேஷ் (20). இவர் நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். உடன்படிக்கும் இவரது நண்பர் சேங்காலிபுரம் வடவேர் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் ஜெகநாதன் (19).
இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வேகமாக சென்று கொண்டிரு்தனர். திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் சென்றுபோது முன்னாள் சென்ற பேருந்தை முந்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | தங்கம் விலை இன்று குறைந்தது! எவ்வளவு?
இதில், மாணவர் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விக்னேஷை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் சந்தீப் ஹுடா!

இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார் சுகுமார்!

மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள்
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



