

பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறையை சென்னை மாநகராட்சி புதன்கிழமை தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் நிர்பயா திட்டத்தின் நிதியின் கீழ் ரூ. 4.37 கோடி மதிப்பில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், கைக் கழுவும் திரவம், உடை மாற்றும் சிறிய அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.