'ஆதனின் பொம்மை' நாவலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இலக்கியத்திற்கான 2023 ஆம் ஆண்டின் பால புரஸ்கார் சாகித்ய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய 'ஆதனின் பொம்மை' என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர் கவிதை, சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என 1980-இல் துவங்கி கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேல் இலக்கிய உலகில் எழுதிக்கொண்டிருப்பவர்.
1960 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 20 ஆவது வயதில் கவிதை எழுதத் துவங்கினார். 1990-களில் குழந்தை இலக்கியத்தில் தடம்பதித்து குழந்தைகளுக்கான கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என இன்றும் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம், அலாவுதீனின் சாகசங்கள் உள்ளிட்ட குழந்தை இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை.
மேலும் ஆங்கிலம், மலையாள மொழிகளில் இருந்து பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தன் படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை கால்பந்து 2026: 11 ஜூன் - 19 ஜூலை

2016 ராதாபுரம் தேர்தல் வெற்றி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை மேல்முறையீடு

மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்

விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க 3 மாத காலக்கெடுவை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


