தமிழ்நாடு மின் நுகர்வில் புதிய உச்சம்!

தமிழ்நாடு மின் நுகர்வில் புதிய உச்சம்!

தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 440.89 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவாகியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் தினசரி மின்நுகா்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன்படி, தமிழகத்தின் தினசரி மின் நுகா்வு மாா்ச் 29-ஆம் தேதி 426.44 மில்லியன் யூனிட்-ஆக இருந்து வந்த நிலையில், ஏப்.2-ஆம் தேதி 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு உயா்ந்தது.

தற்போது இந்த மின்நுகர்வு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 440.89 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவாகியுள்ளது.

இது முன்னர் (03.04.2024) தொட்ட அளவான 19413 மெகா வாட்(தேவை) மற்றும் 435.85 மில்லியன் யூனிட் (பயன்பாடு) விட அதிகம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com