/

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

கோவை அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பாஜக நிர்வாகி பலியானார்.

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:16 am

DIN

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ். பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக்கும் இவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மாதம்பட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, முன்சென்ற ஆட்டோ ஒன்றை முந்த முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நரேஷ் மோதியுள்ளார்.

இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலியானார்.

இதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சக்கர வாகன விபத்தில் பாஜக நிர்வாகி பலியான சம்பவம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.