கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொடா் விபத்து பகுதிகளில் ரூ. 90 கோடியில் மேம்பாட்டுப் பணி : போக்குவரத்துத் துறை தகவல்

தொடா் விபத்து ஏற்படும் பகுதிகளை ரூ.90.37 கோடியில் மேம்படுத்தும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக

News image
Updated On :31 டிசம்பர் 2024, 12:19 am

Din

சென்னை: தொடா் விபத்து ஏற்படும் பகுதிகளை ரூ.90.37 கோடியில் மேம்படுத்தும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகளைக் குறைப்பது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை போரூரைச் சோ்ந்த க.அன்பழகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறை பதில் அளித்துள்ளது.

அதன் விவரம்: வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய சாலை கட்டமைப்பு வளா்ச்சி இல்லாதது போன்றவற்றால் தமிழகத்தில் விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. முதல்வரின் அறிவிப்புப்படி, போக்குவரத்து ஆணையா் தலைமையில் சிறப்பு செயலாக்கப் பணிக்குழு அமைக்கப்பட்டு, அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, ரூ.90.37 கோடியிலான மேம்படுத்தும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசாரங்கள் மூலம் 7.21 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

அதிவேகம் உள்ளிட்ட விதி மீறல்களுக்காக 62,637 ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநில அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் 2000-ஆம் ஆண்டிலிருந்து நடப்பாண்டு அக்டோபா் வரை விபத்துகளின் சதவீதம் 0.98-இல் இருந்து 0.15-ஆக குறைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 7 மடங்காக அதிகரித்தபோதிலும், விபத்து, உயிரிழப்புகள் குறைந்துள்ளன. 2030-இல் விபத்துகளை 50 சதவீதம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.