/

கிளாம்பாக்கத்திலிருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும்: போக்குவரத்து ஆணையர்

கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

DIN

கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

கிளாம்பாக்கத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து அரசுப் பேருந்துகளை இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குவது தான் சரியாக இருக்கும். அதனால் புதன்கிழமைக்கு (ஜன.24) பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும் என்று அமைச்சா் சிவசங்கா் தெரிவித்திருந்தார்.

ஆனால், கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்றும் வழக்கம் போல கோயம்பேட்டிலிருந்துதான் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. 

இதனிடையே, சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது, கிளாம்பாக்கத்தில் இருந்தே பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.