“நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது’’: சர்ச்சையும் விளக்கமும்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் சர்ச்சையான பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வை நடத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. “நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள்.

காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும். ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா? எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது” என்று பேசினார்.

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, “ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல” என்று ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

கோப்புப் படம்
ஜாா்க்கண்ட்: மீண்டும் முதல்வராகிறாா் ஹேமந்த் சோரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com