கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: ஜூலை 27 திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

News image
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
Updated On :25 ஜூலை 2024, 7:50 am

DIN

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் ஜூலை 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஜூலை 27 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்தாண்டு மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

மெட்ரொ ரயில் திட்டத்துக்கான நிதி, தமிழகம் தொடர்ச்சியாக சந்தித்த இரு பேரிடர்களுக்கான நிதி என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணித்து சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசை கண்டித்து ஜூலை 23, சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.