/

ராமேஸ்வரம்: கடலில் மூழ்கிய 3 மீனவர்களில் 2 பேர் பலி

News image
கோப்புப் படம்.
Updated On :15 ஜூன் 2024, 10:48 am

DIN

ராமேஸ்வரத்தில் நடுக்கடலில் படகு கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள்பலியானார்கள்.

ராமேஸ்வரம் மேற்குவாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். அப்போது மண்டபம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் சென்ற படகு பழுதாகி மூழ்கத் தொடங்கியது.

இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 5 மீனவர்களும் கடலில் விழுந்தனர்.

அதில் 2 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில் 2 மீனவர்கள் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் ஒரு மீனவர் மாயமானார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நடுக்கடலில் மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள்பலியான நிகழ்வு ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.