திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதல்வர் மு.க.ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பு

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

News image

கோப்புப்படம்

Updated On :8 மார்ச் 2024, 12:47 pm IST

சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை தொடங்கி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, திமுக - விசிக இடையே பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.