மக்கள் சொல்றாங்க. எனக்கு ஏதாவது உடலுக்கு முடியாமப் போனா, என்னோட பேரப்புள்ளைங்கதான் வண்டில கூட்டிட்டுப் போவாங்க. அவசர ஆத்தரத்துக்கு விரைந்து வந்துபோக முடியாது. தற்போது இவர்கள் அளித்திருக்கும் இடம், அப்பன் திருப்பதி மெயின் ரோட்டுலதான் இருக்கு. அதனால அங்கேயே வீடு கட்டிக் கொடுத்துட்டாங்கன்னா, எனக்கு ரொம்ப வசதியா போகும். முன்ன மாதிரி நடக்க முடியல. சர்க்கரை, ரத்தகொதிப்பு, தைராய்டு என ஏகப்பட்ட நோய்கள் வேற. அதற்காக அடிக்கடி அப்பன்திருப்பதியில் இருக்கிற மருத்துவமனைக்குதான் போறேன். அப்பப்ப எங்க களஞ்சியம் மூலமா நடத்துற சுகம் மருத்துவமனைக்கும் போவேன். அது மதுரைல இருக்கு. அதனால, எனக்கு ஒதுக்கியிருக்குற எடத்துல உடனடியா ஒரு வீட்ட கட்டிக் கொடுத்தாங்கன்னா புண்ணியமாப் போகும் சார்..' கூறுகிறார் கைகூப்பி வணங்கியவாறு நம்மிடம்.