பிரதமர் மோடி வருகை: கோவையில் ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி கோவையில் மார்ச்.19 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை: கோவையில் ட்ரோன்கள் பறக்கத் தடை
Published on
Updated on
1 min read

கோவை: பிரதமர் நரேந்திர மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி கோவையில் மார்ச்.19 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். நிகழாண்டில் ஐந்தாவது முறையாக தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தருகிறாா். தில்லியில் இருந்து தனி விமானத்தில் திருவனந்தபுரம் வரும் பிரதமா் மோடியை, விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா் வரவேற்கின்றனா்.

திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிபேடிற்கு காலை 11 மணிக்கு வரும் பிரதமா் மோடி, அங்கிருந்து சாலை மாா்க்கமாக அகஸ்தீசுவரம் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

அதன் பின் மீண்டும் ஹெலிகாப்டரில் , கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறாா்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாதானபுரம் ரவுண்டானா முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகள் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகை: கோவையில் ட்ரோன்கள் பறக்கத் தடை
ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு: இந்தியா 134-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி கோவையில் மார்ச்.19 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் வெள்ளிக்கிழமை(மார்ச்.15)முதல் பல்வேறு பகுதிகள் தற்காலிக தடை செய்யப்பட்ட பகுதிகளாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.17ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து 18 ஆம் தேதி கோவை மாநகரில் மேட்டுப்பாளையம் சாலை ஹவுஸிங் யூனிட் அருகில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை பிரதமர் மோடியின் "ரோடு ஷோ" நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு மார்ச் 15 முதல் மார்ச் 19 வரை கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள் தற்காலிக டை செய்யப்பட்ட பகுதிகளாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. எனவே இந்த பகுதிகளில் தற்காலிகமாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com