இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐபிஎல்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :22 மார்ச் 2024, 6:28 am

DIN

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) சென்னை - பெங்களூரு அணிகளிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று (மாா்ச் 22) மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்படும். பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம்.

வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சாந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. மாநகர பேருந்து நேராக ரத்னா கஃபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

இதேபோல ரத்னா கஃபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை. வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்லவதற்கு அனுமதி இல்லை.

போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகா்களின் வாகன நிறுத்த அனுமதி அட்டை இல்லாத வாகனங்களை, மெரீனா கடற்கரையின் உட்புறச் சாலையில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.