இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரயில் நிலையத்தில் நடனமாடி விடியோ: வழக்குப் பதிவு செய்தது ஏன்?

ரயில் நிலையத்தில் நடனமாடி விடியோ பதிவிட்ட பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
ரயில் நிலையம்- Center-Center-Visakhapatnam
Updated On :21 மே 2024, 10:50 am

DIN

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடனமாடி இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவிட்ட நான்கு பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் 3 இளம் பெண்கள் திரைப்பட பாடல் ஒன்றுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது மட்டுமின்றி தெருக்களிலும் நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ரயில் நிலையம் போன்ற இடங்களில் உரிய அனுமதி பெறாமல் இது போன்ற விடியோக்கள் எடுக்கக் கூடாது என்கிற விதி நடைமுறையில் உள்ள நிலையில் மூன்று இளம் பெண்கள் நடனமாடி அதை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருப்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் விடியோவில் நடனமாடிய மூன்று இளம் பெண்கள் மீதும் அந்த விடியோவை எடுத்த இளைஞர் மீதும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் அநாகரிகமாக அல்லது தொல்லை தரும் வகையில் நடந்து கொள்ளுதல், அனுமதி இன்றி ரயில்வேக்கு சொந்தமான இடத்திற்கு செல்லுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களிடம் அபராதம் விதித்தனர். மேலும் இது போல் இனி செய்யக்கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.