சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அண்ணாமலைக்கு கமல்ஹாசன் நன்றி

அமரன் திரைப்படத்தை பாராட்டிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

News image

கமல்ஹாசன் (கோப்புப்படம்)

Updated On :4 நவம்பர் 2024, 4:42 am

DIN

அமரன் திரைப்படத்தை பாராட்டிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31ஆம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎஃப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

4 நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த வசூல் 150 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’அமரன்’ திரைப்படத்தை லண்டனில் பார்த்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த அற்புதமான படத்தை கொடுத்த அமரன் படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே அண்ணாமலையின் இந்தப் பதிவுக்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமரன் திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.