சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...

News image
தங்கம் (கோப்புப்படம்)- Din
Updated On :9 அக்டோபர் 2024, 5:46 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை ரூ.560 அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை சில நாள்களாகவே படிப்படியாக உயர்ந்து, கடந்த வாரம் புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 56,960-க்கு விற்பனையாகி மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த வாரத் தொடக்கத்தில் சற்று குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 560 குறைந்து, ரூ. 56,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 59,880-க்கும் ஒரு கிராம் ரூ.7,485-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி அதிரடி குறைவு

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 2 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 100-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. ஒரு லட்சத்துக்கும் விற்பனையாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.