இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (அக். 16) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு.

News image
கோப்புப் படம்
Updated On :15 அக்டோபர் 2024, 2:45 pm

DIN

வடகிழக்கு பருவமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (அக். 16) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.

சென்னை, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சேலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (அக். 15) காலை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் அதி கனமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் வட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ராணிப்பேட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.