பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நிதியமைச்சர் பற்றிய கருத்துக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி கூறிய சர்ச்சை கருத்துக்களுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

News image

வானதி சீனிவாசன் / ஈவிகேஎஸ் இளங்கோவன்

Updated On :17 செப்டம்பர் 2024, 1:29 pm

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி கூறிய சர்ச்சை கருத்துக்களுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஈரோட்டில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து அதனை வெளியே விட்டது கேவலமான விஷயம். அவர் மன்னிப்பு கேட்கையில் நிர்மலா சீதாராமன் எந்த உணர்வு இல்லாமல் இருந்துள்ளார். பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் தேவை. மனிதரை மதிக்கும் மனிதத்தன்மை அவரிடம் இல்லை” என்று விமர்சித்திருந்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில், ”பெண்களை அடிமைகளாக முன்னிறுத்த முயலும் உங்கள் பிற்போக்குத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தியாவின் நிதி பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களைப் பார்த்து, ’ஒரு பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை’ என்று நீங்கள் கூறுவது, நமது நாட்டில் சம உரிமையும் அரசியல் அதிகாரமும் பெரும் பெண்களைப் பார்த்தால் உங்களுக்கு எத்தனை வயிற்றெரிச்சலாக இருக்கிறது என்பதைக் கோடிட்டு காட்டுகிறது.

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்க நீங்கள் யார்? அரசு பொறுப்பிலிருக்கும் ஒரு பெண்ணையே சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிக்கும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால், சாமானிய பெண்களை எப்படி நடத்துவீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “அரசியல் அதிகாரமிக்க பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுக்கு அடக்கம் தேவை என்ற உங்களின் கூற்று, உங்கள் கட்சியைச் சார்ந்த சோனியா காந்தி அம்மையார் உட்பட அனைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி பெண் தலைவர்களுக்கும் பொருந்துமா?

ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்தாமல், பெண்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீங்கள் இப்படி பேசுவது ஒன்றும் வியப்பல்ல.

எனவே, மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் நமது மத்திய நிதியமைச்சரைப் பற்றி பொதுவெளியில் நீங்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.