ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செப்.27ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தில்லியில் பிரதமர் மோடியை செப்.27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.

கோப்புப்படம்.

Published On :22 செப்டம்பர் 2024, 1:55 pm IST

தில்லியில் பிரதமர் மோடியை செப்.27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.

சென்னையில் இருந்து வரும் 26ஆம் தேதி இரவு தில்லி புறப்படும் செல்லும் முதல்வர் ஸ்டாலின் மறு நாள் செப்.27-ல் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு சமக்ரா சிக்ஷா கல்வி திட்டத்தில் தமிழகத்திற்கான நிதி நிறுத்தப்பட்டது குறித்தும் முதல்வர் பேசலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமருடனான சந்திப்பின்போது முதல்வர் மனு அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.