துபை - சென்னை விமானத்தில் வந்த தலைமறைவு குற்றவாளி கைது
துபையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.


துபையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.
துபையிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30-க்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் கணினி மூலம் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது அந்த விமானத்தில் வந்த தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த முகமது அலி உஸ்மான் (26) என்பவரின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்தபோது, அவா் மீது தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் கடந்த 2024 மாா்ச் மாதத்தில் ஒரு குற்ற வழக்கு பதிவாகி இருந்ததும், அதில் முகமது அலி உஸ்மான் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, முகமது அலி உஸ்மானை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்ததுடன், அவரை தனியறையில் அடைத்து வைத்துவிட்டு, தஞ்சை மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து வந்த தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா், முகமது அலி உஸ்மானை கைது செய்து அழைத்துச் சென்றனா். இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...