சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ராமேசுவரத்துக்கு சிறப்பு அதிவிரைவு ரயில்

கோடை காலத்தை முன்னிட்டு விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஏப்ரல் 2025, 8:55 pm

Din

கோடை காலத்தை முன்னிட்டு விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரத்திலிருந்து ராமேசுவரத்துக்கு மே 2 முதல் ஜூன் 30 வரை திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 06105) இயக்கப்படும். விழுப்புரத்திலிருந்து அதிகாலை 4.15-க்கு புறப்படும் ரயில் காலை 11.40-க்கு ராமேசுவரம் சென்றடையும். மறுமாா்க்கமாக ராமேசுவரத்திலிருந்து மேற்கண்ட கிழமைகளில் பிற்பகல் 2.35-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06106) இரவு 10.35-க்கு விழுப்புரம் சென்றடையும். இதில் ஒரு ஏசி வகுப்பு பெட்டி மற்றும் 13 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.