/

தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம்!

தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்..

News image
கோப்புப்படம்
Updated On :18 பிப்ரவரி 2025, 4:29 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.63,920-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து கிராம் ரூ. 7,940-க்கும், ஒரு சவரன் ரூ. 63,520-க்கும் விற்பனையானது. இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7970-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.63,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளியில் விலை தொடர்ந்து 5-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.