கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: சிபிஐ.யிடம் ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி
Updated On :6 ஜனவரி 2025, 9:14 pm

DIN

சென்னை: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விருதுநகரைச் சோ்ந்த அதிமுக முன்னாள் பிரமுகா் விஜய நல்லதம்பி, சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் ஆகியோரிடம் ரூ.30 லட்சம் பெற்ாக புகாா் எழுந்தது.

உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை எனக் கூறி ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சா் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. மேலும், தமிழக காவல் துறைக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லாததால், இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை சிபிஐ விசாரணைக்கு வழங்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.