மக்களை சென்சார் மூலம் கண்காணிக்கும் வட கொரியா! - செய்திகள் நேரலை...

இன்றைய முக்கியச் செய்திகள் நேரலை...
வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் - கோப்புப்படம்
வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் - கோப்புப்படம்

கருணாநிதி பிறந்த நாள்! 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று(ஜூன் 3) கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் திமுகவினர், கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்த நாள்! - முதல்வர்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி "தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்த நாள்!" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க...

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

கருணாநிதி பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் படிக்க...

ஆன்லைன் விளையாட்டு: நேரக் கட்டுப்பாடு விதிகள் செல்லும்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அரசின் விதிகளுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் விவரங்களுக்கு

பேருந்துக் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பயத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்: மு.க. ஸ்டாலின் பேட்டி

நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவோம் என பயந்து மாற்றுத்திறனாளிகள் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் படிக்க...

தேமுதிகவுக்கு அழைப்பு

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். மேலும் படிக்க...

5 பேர் பலி

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,026 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நீரிழிவு மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் நேற்று பலியானார்.

பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தவர் கைது!

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்த பாகிஸ்தானியரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் படிக்க...

அப்பா, ஆசான், தலைவர்! - கனிமொழி

"அப்பா! ஆசான்! தலைவர்!‌ இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது, நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது" என கருணாநிதியை நினைவுகூர்ந்து திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க...

பிரதமருக்கு கடிதம்

பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

மொத்தம் 16 அரசியல் கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

மாணவி தற்கொலை

பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சரிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முதல்கட்ட விசாரணையில், சரிகாவும் அவரது ஆண் நண்பரும் செல்போனில் சண்டை போட்டுக் கொண்டதாகவும், இதன்விளைவாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க...

5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்

வடகொரியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செல்போன் மூலம், அந்நாட்டு அரசு, மக்களை கடுமையான சென்சார் தொழில்நுட்பங்கள் மூலம் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க..

உலகம் அழியப்போகிறதா?

அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது. மேலும் படிக்க..

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்காக மன்னிப்புக் கேட்காததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் படிக்க..

எடியூரப்பா கண்டனம்

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னடர்களிடம் மரியாதையுடன் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்பது யாரையும் சிறியவராக்காது, ஆணவம் யாரையும் பெரியவராக்காது எனத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com