நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் போஸ்டரால் பரபரப்பு!

2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் தவெகவின் போஸ்டர்.

தமிழகத்தை ஆளப்போறோம்

Updated On :

கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28-ஆம் தேதி சென்னையில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமையில், பொதுக் குழுவில் கூட போறோம், தளபதி தலைமையில் 2026 - ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்று கோவை முழுவதும் பொதுக் குழுவுக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

விஜய் தலைமையில் ஆளப்போறோம் என த.வெ.க.வால் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 அன்று சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அண்மையில் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.