விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உத்தரவிட்டுள்ளாா்.

News image

அமைச்சா் க.பொன்முடி

Updated On :24 மார்ச் 2025, 9:41 pm

Din

சென்னை: வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள வன முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்தில் காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில், வனத் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில், வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். மேலும், யானை - மனித மோதல்களை தடுப்பதற்கும், வேளாண் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் பொன்முடி வலியுறுத்தினாா்.

இக்கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.