
ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, மக்கள் அனைவரும் வங்கிக் கணக்குகளைத் தொடங்குமாறு மத்திய அரசு கோரியது; பின்னர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் கொண்டு வந்தது.
தொடர்ந்து, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வலியுறுத்தியது; ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனை மீது கட்டணங்களையும், அபராதங்களையும் மேற்கொள்கிறது. இது, டிஜிட்டல்மயமாக்கல் அல்ல என்று கூறியுள்ளார்.
ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்து வருவதால், ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனையின்போது, வசூலிக்கப்படும் கட்டண அளவை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி, மாதம்தோறும் 5 முறை மட்டும் கட்டணமின்றி ஏடிஎம்களை பயன்படுத்த வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இதில் பணம் எடுப்பது மட்டுமின்றி இருப்பு விவரங்களைத் தெரிந்து கொள்வது உள்ளிட்ட பிற ஏடிஎம் சேவைகளும் அடங்கும்.
அதன்பிறகு ஏடிஎம்மை பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மே 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணத்தை 2 ரூபாய் உயா்த்தி ரூ.23 வசூலிக்க வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுமதி அளித்துள்ளது.
அதே நேரத்தில் தாங்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் 5 முறையும் கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இதன் பிறகு ஏடிஎம்மை பயன்படுத்தினால் மே 1-ஆம் தேதி முதல் ஒருமுறைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
இதையும் படிக்க: தமிழகத்தில் ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.