
சென்னை துறைமுகம் உள்பட இரண்டு இடங்களில் நாளை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நாளை மாலை 4 மணிக்கு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி போர்க்கால ஒத்திகை நடைபெறும் என்றும், போருக்கான தயார் நிலையை சரிபார்ப்பதற்கான பாதுகாப்பு பயிற்சி மட்டுமே இது என்பதால், போர்க்கால ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் - இந்தியா உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்றும் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதனிடையே மத்திய அரசின் உத்தரவின்படி, நாடு முழுவதும் நாளை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.
சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சித்ரா பௌர்ணமி: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.