/

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :29 மே 2025, 8:56 pm

Din

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06035) ஜூன் 6 வரையும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரம் வடக்கிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் செல்லும் ரயில் (எண்: 06036) ஜூன் 8 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15-க்கு தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06012) ஜூன் 8 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3.30-க்கு நாகா்கோவில் செல்லும் ரயில் (எண்: 06011) ஜூன் 9 முதல் ஜூன் 30 வரையும் நீட்டிக்கப்படும். மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030/ 06029) ஜூன் 8 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.