தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தோல்வியைச் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த மசோதாவால் தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை (ஆக. 8) எம்.பி.க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆக. 12) புதன்கிழமை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். மக்கள்தொகையின் அடிப்படையில் 7.18 சதவிகித விகிதாசார பிரதிநிதித்துவம் தொகுதி மறுவரையறையில் குறைந்துவிடக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு அரசியல் காரணங்களுக்காகவும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவசர, அவசரமாக தனித்தீர்மானம் கொண்டுவந்திருப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து போராட்டம் நடத்தியது திமுகதான். திமுக காட்டிய எதிர்ப்புதான் நாடாளுமன்றத்தில் மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம்.
33 சதவிகிதம் மகளிர் இடஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிக்கிறோம். 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திமுக வரவேற்கிறது” என்றார்.
ஆதரவளித்த கட்சிகள்
தவெக
திமுக
காங்கிரஸ்
விசிக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
எதிர்த்த கட்சிகள்
அதிமுக
பாமக
பாஜக
நடுநிலை
தேமுதிக
Summary
Resolution against constituency delimitation! Who supported and who opposed it?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)

தொகுதி மறுவரையறை: திமுக ஆதரவுடன் முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!
எதன் அடிப்படையில் தனித் தீர்மானம்? தொகுதி மறுவரையறை தீர்மானத்துக்கு தேமுதிக எதிர்ப்பு!

தொகுதி மறுவரையறை: பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!
விடியோக்கள்

பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்! | TN Assembly | TVK



