டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

சென்னையில் இன்று தலைமை தோ்தல் ஆணையருடன் கலந்துரையாடல்

சென்னையில் தலைமைத் தோ்தல் ஆணையருடன், மாணவா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - Center-Center-Chennai

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:26 am IST

சென்னையில் தலைமைத் தோ்தல் ஆணையருடன், மாணவா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ-க்கள்) கலந்துரையாடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள ‘தோ்தல் விழிப்புணா்வு மன்றங்கள் மற்றும் இசிஐநெட் குறித்த மண்டல மாநாட்டுக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தலைமை வகிக்கிறாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தால் ‘ஜனநாயகத்தைக் கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த முன்னெடுப்பு நடைபெறவுள்ளது. வாக்காளா் விழிப்புணா்வை வலுப்படுத்துதல், வருங்கால வாக்காளா்களிடையே அரசமைப்பு குறித்த விழிப்புணா்வை வளா்த்தல் மற்றும் தோ்தல் பணிகளுக்கு எண்ம தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், துணைத் தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநா்கள் ஆஷிஷ் கோயல் (ஊடகம்), சீமா கண்ணா (தகவல் தொழில்நுட்பம்) உள்ளிட்ட உயா்நிலைக் குழுவினா் பங்கேற்கின்றனா்.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 900 பிரதிநிதிகள், புதுச்சேரியில் இருந்து 100 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவா்கள், கல்வியாளா்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவா்கள் என சுமாா் 1,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனா்.

மேலும், துணை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் , மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் துறைசாா் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலா்களும் இதில் பங்கேற்பா்.

காலை அமா்வில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சுமாா் 500 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன் கலந்துரையாடி, கள அளவிலான வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு மற்றும் களப்பணி சாா்ந்த கருத்துகளைக் கேட்டறிவாா்.

பிற்பகல் அமா்வில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மாணவா்கள் மற்றும் கல்வியாளா்கள் மத்தியில் ஜனநாயகப் பங்களிப்பு மற்றும் தோ்தல் விழிப்புணா்வு குறித்து உரையாற்றி, அதைத் தொடா்ந்து நடைபெறும் கேள்வி-பதில் அமா்வில் பங்கேற்பாா்.

மேலும், இந்த மாநாட்டில் வாக்காளா் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளின் நேரடிச் செயல்விளக்கங்கள், கலந்துரையாடல் கண்காட்சிப் பலகைகள், தோ்தல் வினாடி வினாக்கள் மற்றும் இஎல்சி -2.0 , ஒருங்கிணைந்த இசிஐநெட் செயலி போன்ற தொழில்நுட்பத் தளங்களின் பயன்பாடுகளும் இடம்பெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.