நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளது குறித்து...

Area affected by floods in Nepal.

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி. - படம் - பிடிஐ

Published On :5 வினாடிகள் முன்பு

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக வேளான் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று (ஆக. 26) காலை கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டின் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 பெண்கள் உள்பட 57 பேர் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம் சென்றிருந்த 57 பேரில், 17 பேர் கொண்ட ஒரு குழு, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஆடியோ மூலம் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். மற்றவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஒரு பேருந்து வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் வினோத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சிக்கியுள்ள பெண்கள் உட்பட தமிழர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் மத்திய வெளியுறவுத் துறை மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி, சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹெலிகாப்டர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகளில் தமிழக அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிக்கியுள்ள அனைவரும் பத்திரமாக மீட்கப்படும் வரை தமிழக அரசு தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று அமைச்சர் வினோத் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Agriculture Minister Vinoth has stated that the Tamil Nadu government is taking vigorous measures to rescue Tamils ​​stranded in the Nepal floods.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.