நேபாளத்தில் தமிழர்கள்: 4 அமைச்சர்கள் தில்லி செல்கின்றனர்!நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல முதல்வர் உத்தரவு!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் விஜய் வழங்கினார்!

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை முதல்வர் வழங்கியது தொடர்பாக...

Nammazhvar award for the year 2025-26

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கிய முதல்வர் ச. ஜோசப் விஜய். - டிஎன்எஸ்

Published On :27 ஆகஸ்ட் 2026, 2:56 pm IST

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை முதல்வர் ச. ஜோசப் விஜய் வழங்கினார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் இன்று (ஆக 27) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை செ.நல்லசிவம், அ. சுப்பிரமணியன் மற்றும் சாதனா ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதில் சிறப்பாகச் செயல்பட்டு இதர உழவர்களையும் உத்வேகத்துடன் ஈடுபடச்செய்யும் உழவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025-2026 ஆம் ஆண்டில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செ.நல்லசிவம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ. சுப்பிரமணியன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா ஆகியோருக்குத் தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருதுகளை முதல்வர் விஜய் வழங்கிச் சிறப்பித்தார்.

நம்மாழ்வார் விருது பெற்றுள்ள செ. நல்லசிவம், கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக இயற்கை இடுபொருள்களைக் கொண்டு சோளம், கரும்பு, மா, தென்னை மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்தும், இயற்கை வேளாண் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருவதோடு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் வகையில் விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார்.

அ. சுப்பிரமணியன், கடந்த 10 ஆண்டு காலமாக உயிர்ம வேளாண்மை முறையில் நெல் வகைகள், நிலக்கடலை, குறுமிளகு, தென்னை, வால்நட் போன்றவற்றைச் சாகுபடி செய்தும், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருகிறார். மேலும், 675-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

சாதனா, கடந்த 11 ஆண்டுகளாக உயிர்ம வேளாண்மை முறையில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயிறு, வாழை, தென்னை, மா, பலா, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருவதுடன், சிறுதானியம் மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார். மேலும், 472-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் முனைவர் பொ.சங்கர், வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் க.வீ.முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Summary

CM Vijay - Agri Dept Nammazhvar award for the year 2025-26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.