

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து தஞ்சாவூர் இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து புதுச்சேரி அருகே கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனியார் பேருந்து நிறுவனங்கள் கூடுதலாகப் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்தவகையில் இன்று காலை சென்னையிலிருந்து தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்ற தனியார் பேருந்து புதுச்சேரி காலாப்பட்டு சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு கட்டை மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் தூக்கக் கலக்கத்தில் பயணித்த பயணிகள் அலரி அடித்து கூச்சலிட்டனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேருந்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகவும், இதனால் பேருந்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.