சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்கக் கோரி தேவாரத்தில் பட்டினி போராட்டம்!

சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி தேவாரத்தில் பட்டினி போராட்டம் நடைபெறுகிறது.
பட்டினி போராட்டம்
பட்டினி போராட்டம்
Updated on
1 min read

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், தேவாரத்தில் பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பில் தேவாரம் முதல் கேரள மாநிலத்தை இணைக்கும் சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி 3 ஆம் கட்டமாக பட்டினி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தேவாரத்தில் இருந்து டி. மீனாட்சிபுரம் வழியாக கேரளத்தை இணைக்கும் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாக்கலூத்து மெட்டு மலைச்சாலையை அமைக்க கடந்த 44 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை அடிக்கல் நாட்டப்பட்ட அச்சாலையை அமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால், அண்டை மாநிலமான, கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை நெடுங்கண்டம், பூப்பாறை போன்ற பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் இப்பகுதி மக்கள் நாள்தோறும் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தேவாரத்தில் இருந்து டி. மீனாட்சிபுரம் வழியாக 8 கிலோமீட்டர் சாக்கலூத்து மெட்டு இணைப்புச் சாலை மூலமாக கேரளத்துக்கு அரை மணி நேரத்தில் சென்று விடலாம்.

அதன்படி கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசிதழில் சாலை அமைப்பதற்கான அனுமதி வெளியிடப்பட்டது.

ஆனால் வனத்துறையினர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதற்கிடையே தேவாரம் மற்றும் அதை சுற்றிய 25 கிராம மக்கள் பயன்பெறும் சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்க வலியுறுத்தி தேவாரம் பாண்டியர் குல வணிக சங்கர் சார்பில் கடந்த மாதம் கண்டன ஆர்ப்பாட்டமும், 2 ஆம் கட்டமாக போராட்டமும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை மூன்றாம் கட்ட போராட்டமாக பட்டினி போராட்டம் காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com