

சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வருகின்றது. ஜன. 30 வியாழக்கிழமையான நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தோடு போட்டிபோட்டுக்கொண்டு வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 25 ஆயிரம் உயர்ந்தது.
தங்கம் - இன்றைய நிலவரம்
வெள்ளிக்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,800 குறைந்து ரூ. 1,29,600-க்கும், ஒரு கிராம் ரூ. 600 குறைந்து ரூ. 16,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி - இன்றைய நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 415-க்கும், கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்து ரூ. 4,15,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்த விலையுயர்வு பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் உயர வாய்ப்புகள் உள்ளதாக தங்க மதிப்பீட்டாளர்கள் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.