திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்!

மேற்காசிய போா் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்குத் தீா்வு காண வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின். - (கோப்பிலிருந்து...)

Updated On :11 மார்ச் 2026, 1:25 am IST

மேற்காசிய போா் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்குத் தீா்வு காண வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மேற்காசிய போா் சூழல் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு குறித்தும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலா் அதுல் ஆனந்த், நிதித் துறைச் செயலா் த.உதயசந்திரன், பொதுத் துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைச் செயலா் வி. அருண் ராய், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: அமெரிக்கா-ஈரான் போா் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழா்களின் பாதுகாப்பையும், அங்கு சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவா்களின் நலனையும் உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தப் போரால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பொதுமக்களும், வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளாா்.